ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடம் ஊர்வலம்...

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில்  திருவிழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடம்  ஊர்வலம்...
X
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடம் ஊர்வலம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பொதுவாக மற்ற மாரியம்மன் ஆலயங்களில் திருவிழா தொடங்கும் முன் கம்பம் நடப்படுவது வழக்கம்,பின்பு திருவிழா முடிந்த பிறகு நீர்நிலைகளில் அவை விடப்படும்,ஆனால் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் மட்டும் எப்பொழுதும் கம்பம் மற்றும் அம்மன் கழுத்தில் நிலையாக தாலி இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பெயர் பெற்றது. இந்த நிலையில் வருடம் தோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் ஐப்பசி 4-ஆம் நாள் பூச்சாட்டுதலுடன் திருவிழாவானது தொடங்கியது. திருவிழா தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே இருந்து பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாதாரணை காட்டப்படுவது வழக்கம் அந்த வகையில் இன்று 7-வது நாள் கட்டளையாக நாமக்கல் ரோடு தேவேந்திர குல சமூகத்தார் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.ஊர்வளமாக சென்று நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் ஆராதனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story