கல்லூரி மாணவிக்கு ரூ.1.00 இலட்சம் கல்வி கட்டணத்தினை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

X
NAMAKKAL KING 24X7 B |1 Dec 2025 9:10 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் சமூக பொறுப்பு நிதியிலிருந்து கல்லூரி மாணவிக்கு ரூ.1.00 இலட்சம் கல்வி கட்டணத்தினை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவிக்கு பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து (Corporate Social Responsibility Fund) ரூ.1.00 இலட்சத்திற்கான கல்வி கட்டண தொகையினை வழங்கினார். சமூக பொறுப்பு நிதியிலிருந்து கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி போன்ற பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனை (Allied Health Science Course)-ல் இளங்கலை (இரத்த சுத்திகரிப்பு) பிரிவில் பயிலும் மாணவி பி.விபாஷினிக்கு, சமூக பொறுப்பு நிதியிலிருந்து கல்வி கட்டணமாக ரூ.1.00 இலட்சத்திற்கான கசோலையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சு.வடிவேல் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
