பல்லடத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் கைது

X
Kangeyam King 24x7 |16 Dec 2025 7:34 PM ISTதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்ன காளிபாளையம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை கொட்டி அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று திருப்பூர் மாநகராட்சி இரண்டு குப்பை லாரிகளில் குப்பைகளை ஏற்றி குப்பை கிடங்குக்கு அனுப்பியது. அப்போது சின்ன காளிபாளையம் பகுதியில் கால்நடைகளுடன் இப்பகுதி பொதுமக்கள் மறியல் செய்து இரண்டு லாரிகளையும் தடுத்து சிறை பிடித்தனர். இதனால் போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர் தொடர்ந்து ஊரே ஒன்று கூடி இதனை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்று தள்ளுமுள்ளுகளும் வாக்குவாதங்களும் மணிக்கணக்கில் நடைபெற்றன. இந்நிலையில் ஒவ்வொருவரையும் போலீசார் தரவ என இழுத்து கைது செய்த சம்பவமும் அரங்கேறியது. இதில் சிலர் காயங்களுடன் கைதாகினர் அதனைத் தொடர்ந்து ஒரு சில பெண்கள் மயக்கமடைந்தனர் இருப்பினும் போலீசார் அவர்களை கைது செய்ய தீவிரம் காட்டி குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் அரங்கேறியது இதனால் இப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது தொடர்ந்து மக்களின் தள்ளுமுள்ளுக்குப் பிறகு இரண்டு லாரிகளையும் போலீசார் குப்பை கூடங்களுக்குள் அனுப்பினர் இதனால் இப்பகுதியே கலோ பரம் போல காட்சி அளித்தது
Next Story
