ராசிபுரம் அருகே நெடுஞ்சாலை பணிக்காக வண்டல் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தடுத்து நிறுத்தி லாரிகளை சிறை பிடித்து வாக்குவாதம்..

X
Rasipuram King 24x7 |22 Jan 2026 9:23 PM ISTராசிபுரம் அருகே நெடுஞ்சாலை பணிக்காக வண்டல் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தடுத்து நிறுத்தி லாரிகளை சிறை பிடித்து அதிகாரியிடம் வாக்குவாதம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் பகுதியில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் ஏரியானது அமைந்துள்ளது. நெடுஞ்சாலை பணிக்காக ஏரியில் இருந்து சுமார் 5000 கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியதாக கூறப்படும் நிலையில் அதற்கான முகப்பு வாயில் பேனரானது வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த 1 மாதமாக ஏரியிலிருந்து தினம் தோறும் இரவு பகல் என 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளிச் செல்வதாகவும், 30 அடி ஆழத்திற்கு மணல்களை அள்ளியதால் அங்கு நீர் ஊத்துப்போன்று ஆரம்பித்து நீர்வர துவங்கியுள்ளது. இதனை கண்ட விவசாயிகள் ஏரியில் மண்ணள்ளும் நபர்களை தடுத்து நிறுத்தி,ஹிட்டாச்சி வாகனம்,ஜேசிபி,டிப்பர் லாரிகள் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை சிறை பிடித்தனர் . அளவிற்கு அதிகமாக மணல் அள்ளுவதாகவும் நெடுஞ்சாலை பணிகளுக்கு மணல்கள் பயன்படுத்தப்படவில்லை விற்பனைக்காக பயன்படுத்தப்படுகிறது என அதிகாரிகளிடம் கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக 100கும் மேற்பட்ட விவசாயிகள் ஏரியில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் சட்டவிரோதமாக மணல்களை அள்ளிச் சென்ற லாரியின் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டுமென தொடர்ந்து கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.புதுச்சத்திரம் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியது அடுத்து விவசாயிகள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்... இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பிள்ளாநல்லூர் ஏரியிலிருந்து நெடுஞ்சாலை பணிக்காக மணல் அள்ளுவதாகக் கூறிவிட்டு சிலர் மணல்களை விற்பனை செய்வதாகவும் குற்றம் குற்றம் சாட்டினர். கடந்த 15 வருடங்களாக விவசாயிகளுக்கு வண்டல் மண் கேட்டு பலமுறை மனு அளித்து அனுமதி வழங்காத மாவட்ட நிர்வாகம்,தற்போது நெடுஞ்சாலை பணிக்கு மட்டும் அனுமதி வழங்கிவிட்டு விவசாயிகளை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.. இந்நிலையில் மீண்டும் மாலையில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி அப்பகுதியில் பந்தல் அமைத்து விவசாயிகள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராசிபுரம் வட்டாட்சியர் சசிகுமார், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, மற்றும் ஏடி மைன்ஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..
Next Story
