கடையக்குடி ஊராட்சியில் 100 சமத்துபுர வீடுகளை முதல்வர் திறந்து வைத்தார்
Pudukkottai King 24x7 |7 Feb 2026 6:50 AM ISTபுதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கடையக்குடி ஊராட்சியில் 6 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கடையக்குடி ஊராட்சியில் 6 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு அலுவலர்களுக்கு தனித்தனி அறைகளுடன் புதுக்கோட்டையில் 10 கோடி ரூபாய் செலவில், 28,716 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடம் ஆகியவை இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பா.ஜெயசுதா, செயற்பொறியாளர் ஆர்.பார்த்திபன், அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.அருண்முருகானந்தம், திருமதி.ஆர்.பேபிராணி, வீட்டுவசதி வாரிய உறுப்பினர் திரு.வி.ஆர்.இளையராஜா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி.மேகலா முத்து, .பொன்ராமலிங்கம், உதவிப்பொறியாளர் சி.சுரேஷ் பாபு, ஒப்பந்ததாரர் எம்.பி.எஸ்.பாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story


