ரூ 100  மதிப்புள்ள மின் விளக்குகளை பொருத்துவதற்கு ரூ.150 கூலி 

ரூ 100  மதிப்புள்ள மின் விளக்குகளை பொருத்துவதற்கு ரூ.150 கூலி 
X
கொழுமங்குழி ஊராட்சியில் 100 ரூபாய் மதிப்புள்ள மின் விளக்குகளை பொருத்துவதற்கு ரூ.150 கூலி 
தாராபுரம் தாலுக்கா குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுமங்குழி பஞ்சாயத்தில் அனுமதிக்கப்படாத மின்விளக்குகள் பொறுத்தப்படுவதாகவும் அப்படி பொருத்தப்படும் விளக்குகளை முறையாக பொருந்துவதில்லை எனவும் இதனால் மின் விளக்குகள் கீழே கழண்டு விழுகின்றது எனவும் இதனால் பாதைசாரி மக்கள் மீது விழும் அபாயமும்  உள்ளது என்கின்றனர். கீழே விழும் விளக்குகளில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்  குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள். மேலும் இந்த விளக்குகளின் ரூ.100க்கு வாங்குவதாகவும் அனால் இந்த விளக்குகளை பொருத்துவதற்கு கூலியாக ரூ.150 வழங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் அடிக்கடி இந்த விளக்குகள் கழன்று கீழே விழுவதால் ஒவ்வொரு முறையும் ரூ. 150 செலவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
Next Story