காங்கேயம் மறவபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு மெம்பர்கள் புகார் : 100 நாட்கள் வேலை திட்டத்தில் நூதன கொள்ளை புகார் தெரிவிக்கும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

மறவபளையம் ஊராட்சி மன்ற தலைவர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த 3 வருடங்களாக செய்து வருவதாகவும் வார்டு உறுப்பினர்கள் தெரிவித்து வந்த வேலையில் 100 நாள் வேலை திட்டத்தில் 80 நபர்கள் வேலை செய்த போது 90 பேர் வந்ததாக துணைத் தலைவர் உட்பட வார்டு மெம்பர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள மறவபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் குற்றசாட்டி தொடர்ந்து பல்வேறு குற்றசாட்டுகளை கடந்த 3 வருடங்களாக தெரிவித்து வந்த வேளையில் தற்போது 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் நூதன முறையில் வராத 10 ஆட்களுக்கு சம்பளம் எடுத்ததாக கடந்த 3 நாட்களாக குற்றம் தெரிவித்த வேளையில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை பணி நடைபெற்ற இடத்தையும் நேரில் ஆய்வு செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ளது மறவபாளையம். மறவபாளையம் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்க போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட துவங்கினர் கீதமணி சிவகுமார் பெண் தலைவர். மேலும் இந்த ஊராட்சியில் போட்டியிட்ட திமுக,அதிமுக வார்டு உறுப்பினர்கள் தெரிவிக்கும் எந்த புகாரையும் சரி செய்வதில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது குடிநீர்,தெருவிளக்குகள், சாலைவசதிகள் சரிசெய்வதில்லை எனவும் ஊர் பொதுமக்களும் கோரிக்கை முன்வைக்கின்றனர். மரவாபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் 1. திருமூர்த்தி (சுயேட்சை ),2.சுப்பிரமணி , 3. ரதி, 4. மஞ்சு சுப்பிரமணியம், 5.ரேணுகாதேவி, 6.செல்வி, 7.குஞ்சுமணி, 8.திலகவதி , 9.ருக்குமணி வெற்றி பெற்றனர்.இதில் துணைத்தலைவராக மஞ்சு சுப்பிரமணியம் தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2022ம் வருடம் பிப்ரவரியில் வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமலும் தீர்மானம் நிறைவேற்றப்படாமலும் நிறைவேற்றியாத பொய்யான தகவல்களை அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் 25.06.2024 அன்று தனியார் நிறுவனத்திற்கு மற்றும் பொதுமக்களுக்கு வீட்டு வரி மற்றும் தொழில் வரி செலுத்தியத்திற்கு முழுத்தொகையும் பெற்றுக்கொண்டு ஊராட்சி மன்றத்தில் இருந்து ரசீது வழங்கிவிட்டு அதற்க்கு உண்டான தொகையை அரசுக்கு செலுத்தவில்லை என வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தனர். 100 நாள் வேலை என்று அழைக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கிராம தோறும் உள்ள பெண்கள்,ஆண்கள் இத்திட்டத்தில் பணியமர்த்தப்பட்டு அரசே சம்பளம் வழங்கிவருகின்றது. கிராமங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் காங்கேயம் அடுத்த மறவபாளையம் ஊராட்சி சார்பில் செம்மங்குலிபாளையம் பகுதியில் உள்ள குளம் தூர்வாரும் பணிக்கு கடந்த 3 நாட்களாக 90 நபர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும் அதற்க்கு ரூ.8,32,000 தொகை ஒதுக்கப்பட்டதாகவும் பணிகள் நடைபெற்றது. தினமும் அங்கு சென்ற ஊராட்சி மன்ற துணை தலைவர் மஞ்சு சுபராமணியம் மற்றும் வார்டு உறுப்பினர் திருமூர்த்தி ஆய்வு செய்ததில் 90 நபர்கள் வேலை செய்வதாக தின பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு 80 நபர்கள் மட்டுமே பணியாற்றி உள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டு. காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வளர்ச்சி அலுவலர் அலுவலர்கள் ஆகியோர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை பணிகள் நடைபெறும் இடத்தையும் ஆய்வு செய்யவில்லை . மேலும் இதற்கு முன்பும் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்னும் ஊராட்சி மன்ற பதவி காலம் 1 மாதம் மட்டுமே உள்ள நிலையில் இவர் மீது சுமத்தாட்ட புகார் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு ஒரே காரணம் இவர் ஆளுங்கட்சியான திமுக என்பதால் என பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story