காவிரியில் வெள்ளபெருக்கு 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய வயல்வெளிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு..
Sangagiri King 24x7 |1 Aug 2024 3:03 PM GMT
சங்ககிரி: காவிரியாற்றில் வெள்ளபெருக்கு கரும்பு ,வாழை தென்னை பருத்தி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு விவசாயிகள் பெரும் கவலை ...
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் காவிரி ஆற்றங்கரைய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் வீடுகள், பாலம், குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளிட்டவைகள் வெள்ள நீரில் மூழ்கி பெரும் பாதிப்பு பொதுமக்கள் கடும் அவதி.... காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் கர்நாடாக அணைகளான கபின, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணை 43வது முறையாக அதன் முழு கொள்ளவுவான 120 அடியை எட்டியது. இந்நிலையில் மேட்டூர் கிழக்கு, மேற்குகரை கால்வாய்களிலும் தண்ணீர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதையடுத்து தேவூர் அருகே உள்ள காவேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி மதிக்கிழான் திட்டு,மணக்காடு பகுதியில் 30 வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. காவேரி பட்டி பரிசல் துறையில் உள்ள பஞ்சமுக விநாயகர், ராகு, கேது கோயில்கள் உள்பட அதனைசுற்றியுள்ள கோயில்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் தேவூர் அருகே அண்ணமார் கோவில் பகுதியில் உள்ள பாலம் தண்ணீரில் முழுவதும் முழ்கியது. கோனேரிபட்டி பகுதியில் இருந்து அரசிராமணி பகுதிக்கு செல்லும் குடிநீர் ஏற்று நிலையம்,காவேரிபட்டி பரிசல் துறை பகுதியில் இருந்து தேவூர் பேரூராட்சி பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் ஏற்று நிலையம், புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் இருந்து சங்ககிரி,திருச்செங்கோடு பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் ஏற்று நிலையம் உள்ளிட்ட குடிநீர் நீரேற்று நிலையங்கள் தண்ணீரில் முழ்கியது. இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீரேற்று நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளதையடுத்து மேலும் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றன. தேமேலும் வூர்,அரசிராமணி, சங்ககிரி,திருச்செங்கோடு,பகுதிகளுக்கு செல்லும் காவிரி குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவூர் அருகே கோம்புக்காடு கொட்டாயூர் ஆத்துக்காடு, கல்வடங்கம், காவேரி பட்டி,வெள்ளாளபாளையம், அண்ணமார் கோவில், ராணா தோட்டம்,புள்ளாக்கவுண்டம்பட்டி,இராமக்கூடல்,வேலாத்தா கோவில், புளியம்பட்டி, உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள்,தென்னை, வெண்டை, சோளம், உள்ளிட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெறும் கவலை அடைந்துள்ளனர்.
Next Story