சிவகங்கையில் 1000 எக்டேரில் உளுந்து சாகுபடி

சிவகங்கையில் 1000 எக்டேரில் உளுந்து சாகுபடி
சிவகங்கை மாவட்டத்தில் 1000 எக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்படுவதாக வேளாண் இணை இயக்குனர் லட்சுமிபிரபா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் 1000 எக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்படுவதாக வேளாண் இணை இயக்குனர் லட்சுமிபிரபா தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உளுந்து, தட்டைபயறு, கொள்ளு உள்ளிட்டவை 1500 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. உளுந்து மட்டுமே 1000 எக்டேரில் பயிரிடுகின்றனர். ஆடிபட்டத்தில் நிலக்கடலையில் ஊடுபயிராக தட்டை பயறு, துவரை, இறவையில் தனிப்பயிராக சாகுபடி செய்கின்றனர். எஸ்.புதுார் ஒன்றியத்தில் அக்., நவ., மாதங்களில் அதிக பரப்பளவிலும், இதர வட்டாரங்களில் குறிப்பிட்ட பகுதியில் உளுந்து சாகுபடி செய்கின்றனர். தற்போது உளுந்தம் பருப்பு விலை கிலோ ரூ.160 முதல் 190 வரை விற்கிறது. இதன் தேவையும் அதிகரித்துள்ளது. பயறு வகைகளின் சாகுபடி காலம் 65 முதல் 70 நாட்களாகும். குறைந்த செலவில் ஏக்கருக்கு குறைந்தது 400 கிலோ மகசூல் கிடைத்தாலே நல்ல லாபம் பெறலாம். இம்மாவட்டத்தில் தற்போது வம்பன் - 8 ரக உளுந்து விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அதே போன்று வம்பன் 10 ரகம் சில வட்டாரங்களில் விரும்பி சாகுபடி செய்கின்றனர். வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் இது வரை 9600 கிலோ விதை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 4200 கிலோ விதை இருப்பு உள்ளது என்றார்.
Next Story