காலநிலை மாற்றத்தால் ஆணைக்கொம்பன் நோய் தாக்கி 1,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிப்பு
Thanjavur King 24x7 |22 Dec 2024 12:26 PM GMT
வேளாண்மை
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் காலநிலை மாற்றத்தால். ஆனைக் கொம்பன் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி 1,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அன்னப்பன்பேட்டை, மெலட்டூர் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் மின்மோட்டார் மூலம் 3,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் நாற்றங்காலில் இருந்து விவசாயிகள் நாற்று பறித்து வயல்களில் நடவு செய்தனர். இந்நிலையில், அண்மைக்காலமாக நிலவும் காலநிலை மாற்றத்தால், இக்கிராமங்களில் 1,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் ஆனைக்கொம்பன் நோய் தாக்கு தலுக்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாக நெற்பயிர்கள் வளராமல் கருகிவிடுவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
Next Story