ராசிபுரத்தில் அதிமுகவினர் 1000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டம் கைது..

ராசிபுரத்தில் அதிமுகவினர் 1000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டம் கைது..
ராசிபுரத்தில் அதிமுகவினர் 1000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டம் கைது..
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,சரோஜா தலைமையில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்... ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி,சரோஜா உட்பட 1000க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது... அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தமிழக திமுக அரசை கண்டித்தும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரியும் அதிமுக சார்பில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, தொடர் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றசாட்டுகளுக்கு துணை போகும் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் 1000க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து,தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி கைதை கண்டித்து அதிமுகவினர் காவல் துறைக்கு எதிராக கோசங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழ்நிலையது..
Next Story