பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக்கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்.
Arani King 24x7 |7 Jan 2025 11:27 AM GMT
ஆரணி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க கோரி விவசாயிகள் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிரியாணி சாப்பிடும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆரணி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க கோரி விவசாயிகள் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிரியாணி சாப்பிடும் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடத்தினர். தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றை மட்டும் அறிவித்துள்ளது. இதன் மதிப்பு மொத்தம் 103 ரூபாய் ஆகும். இதை வைத்துக் கொண்டு பொதுமக்கள் எப்படி பொங்கலை கொண்டாடுவார்கள் ஆகையால் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிரியாணி சாப்பிடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டதலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர்கள் மடவிளாகம் ஏ.சிவா, சதுப்பேரி மூர்த்தி, பூபாலன், மலைகோவிந்தன், ஒன்றிய நிர்வாகிகள் வடுகசாத்து தாமோதரன், வேலப்பாடி குப்பன், ஆதனூர் பார்த்தசாரதி, ஆகாரம் குப்பன், குணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story