தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா.

X
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆலோசனைப்படி,தமிழகத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் மேற்பார்வையில்,தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் புங்கன் வேப்பமரம் நாகல் மரம் உள்ளிட்ட 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட வனத்துறை அதிகாரி ரேஞ்சர் பார்த்திபன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஒன்றியக் குழு பெருந் தலைவர் ஒரத்தி கே.கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் பொன்மலர் சிவகுமார், இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். இதில் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம், விவசாய அணி அமைப்பாளர் சுந்தரம், சமூக ஆர்வலர் ஆர்.சத்தியகுமார் மற்றும் காயத்ரி தங்கராஜ் உட்பட மாணவ மாணவிகள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

