முதல்வரே நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று அல்லது பதவி விலகு என ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்*

முதல்வரே நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று அல்லது பதவி விலகு என ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்*
முதல்வரே நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று அல்லது பதவி விலகு என ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சிவராஜ் விடுதி அருகில் ஜாக்டோ-ஜியோ சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருநாவுக்கரசு, அருள்மொழிவர்மன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுக அரசுக்கு எதிராக பதாதகைகள் ஏந்தி கடும் வெயிலில் முதல்வர் ஸ்டாலின் அவர்களே தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ள அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 10அம்ச கோரிக்கை வலியுறித்தி திமுக அரசுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கோஷமிட்ட அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று இல்லையேல் நடையை கட்டு என கோசங்கள் எழுப்பினர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் ஞானசேகரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் கலந்துக்கொண்டனர்.
Next Story