காரில் கடத்திய 1000 கிலோ அரிசி பறிமுதல்

X
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை புதுக்கடை அருகே உள்ள மேலங்கலம் பகுதி வழியாக கார் ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவருக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர் சோதனை இட்டனர். அப்போது அந்த காரில் மூடை மூடியாக ரேஷன் அரிசி காணப்பட்டது. இதை அடுத்து வாகனத்தை டிரைவருடன் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் கோட்டார் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்ற சென்ற ஆயிரம் கிலோ ரேஷன் அரிசிகள் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் கார் டிரைவர் கோட்டாறு பகுதி அசோக் (29) என்பவரை கைது செய்து, அரிசியை வாகனத்துடன் உணவு கடத்தல் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story

