ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் பங்கேற்பு

திருவள்ளூரில் உள்ள ஈதுகா பள்ளிவாசலில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் பங்கேற்பு: அதிக அளவில் வட இந்திய இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை செய்தனர்
திருவள்ளூரில் உள்ள ஈதுகா பள்ளிவாசலில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் பங்கேற்பு: அதிக அளவில் வட இந்திய இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை செய்தனர் நாடு முழுவதும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழாவான ஈகைத் திருநாள் எனப்படும் புனித ரமலான் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் பகுதியில் ஈதுகா பள்ளிவாசலில் இன்று காலை முதல் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கொண்டு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர் . தொழுகை முடிந்த பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் அன்பை பரிமாறிக் கொண்டனர் பின்னர் ஏழைகளுக்கு தானம் செய்தனர். இந்த ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான வட இந்திய இஸ்லாமியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்தனர்
Next Story