ராஜபாளையத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகையை முன்னிட்டு காலை 7 மணி அளவில் ஊர்வலம் நடைபெற்றது. சம்மந்தபுரத்தில் இருந்து இஸ்லாம் கொடியை ஏந்தியவாறு, இறைவன் புகழ் வாசகங்களை முழக்கமிட்ட படி இஸ்லாமியர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் நகர் வழியாக வந்து, முடங்கியாறு சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நிறைவடைந்தது. மைதானத்தின் வாசலில் இருந்த கம்பத்தில் கொடியை ஏற்றிய பின்னர் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அரை மணி நேரம் நடைபெற்ற தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள், தொழுகை முடிந்தவுடன் ஒருவொருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.
Next Story

