ஜெபந்தியில் 1000 ரூபாய் பணம் பெற்ற போலி வி ஏ ஓ கைது

X
திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை ஜமாபந்தியில் பட்டா நம்பர் மாற்ற விவசாயிடம் 1000 ரூபாய் பணம் பெற்ற போலி வி.ஏ.ஓ கைது திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகா வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளான வீட்டுமனை பட்டா மற்றும் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகள் தொடர்பாக மனு அளிக்க வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்ற வருகிறது ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி முகாமில் ஊத்துக்கோட்டை அடுத்த சிற்றம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் தனது 30 சென்ட் நிலத்திற்கான பட்டா நம்பர் மாற்றுவதற்காக மனு அளிக்க நேற்று வந்துள்ளார், அப்போது அவரிடம் வட்டாட்சியர் அலுவலகம் வெளியே இருந்த நபர் தான் ஒரு கிராம நிர்வாக அலுவலர் எனவும் பட்டா நம்பர் மாற்றுவதற்கு தான் உதவி செய்வதாகவும் கூறி முதல் கட்டமாக விவசாயிடமிருந்து 1000 ரூபாய் அவரிடம் பெற்றுள்ளார், அதனால் சந்தேகமடைந்த விவசாயி சந்திரசேகர் ஜமாபந்தி முகாமில் இருந்த ஊத்துக்கோட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கஜேந்திரிடம் புகார் அளித்துள்ளார், அத்தகைய நபர் மீது குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஊத்துக்கோட்டை போலீசில் புகார் அளித்ததின் பேரில் அலுவலகத்தின் வெளியே வி.ஏ.ஓ எனக்கூறி போலியாக திரிந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் பெரியபாளையம் அடுத்த வடமதுரை பகுதியைச் சேர்ந்த செல்வின் -42 என்பவர் என தெரிய வந்தது. விவசாயிடமிருந்து 1000 ரூபாய் பெற்ற பணத்தை போலீசார் பறிமுதல் செய்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் இரவு திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ எனக் கூறி பெருமக்களிடம் பணம் பெற்று வந்த புரோக்கரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது,
Next Story

