ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000 மரக்கன்றுகள் நடவு

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் மு.கருணாநிதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அடைக்கலம் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேக்கு, மகாகனி, செம்மரம், ஈட்டி, நாவல், வேங்கை, வேம்பு, புங்கன், இலுப்பை, நீர்மருது, மகிழம், சொர்க்கம், குமிழ், பாதாம் போன்ற மரக்கன்றுகளை, மெகா பவுண்டேஷன் நிறுவனர் விமல்ராகவன், சென்னை தொழிலதிபர் சோமசுந்தரம், ஆவணம் கிராமக் கமிட்டிச் செயலாளர் ராமசாமி ஆகியோர் நட்டு வைத்தனர். இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், கிராமத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

