குமரியில் 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குமரியில்  1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
X
அதிகாரிகள் நடவடிக்கை
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி  தலைமையில்,  ஓட்டுனர் ஜாண்பிரைட் மற்றும்  பறக்கும் படை குழுவினர்  அருமனை பகுதியில் நேற்று ரோந்து பணியில் இருந்தனர்.  அப்போது கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று  சந்தேகத்திடமாக வந்து கேண்டு இருந்தது .அதனை நிறுத்தும் படி சைகை காட்டிய போதிலும் கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து துரத்தி சென்று அண்டுகோடு என்னும் இடத்தில் வைத்து மடக்கி பிடித்து போது, டிரைவர்  தப்பி ஓடினார். தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்ததில் 1000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து  அரிசி காப்புக்காடு தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.கடத்தல் வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
Next Story