திருப்பூரில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசி, 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
Tiruppur (North) King 24x7 |5 Sep 2024 4:24 PM GMT
திருப்பூரில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசி, 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசி, 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல். திருப்பூர் காங்கேயம் சாலை ஆர்.வி.இ லே அவுட் 3வது வீதி குடியிருப்பு பகுதியில் தனி அறை எடுத்து ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைத்திருப்பதாகவும் பல்வேறு ரேஷன் கடைகளில் இருந்தும் பொது மக்களிடம் இருந்தும் குறைவான விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி அவற்றை கேரளாவிற்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருவதாகவும் தகவல் அறிந்த உணவு வட்டவழங்கல் துறையினர் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற நபர்களை கண்டு பின் தொடர்ந்து சென்ற போது அவர்கள் ஒரு அறையில் ஏராளமான அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர் உடனடியாக அந்த அறையில் சோதனை செய்து அரிசி மூட்டை ஏற்றி சென்றவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் அரிசியை ஒதுக்கி கேரளாவிற்கு கடத்தி வந்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து 22 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அதிகாரிகள் உள்ளே சோதனை செய்து கொண்டிருந்த போது அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து நைசாக நழுவி தப்பிச் சென்றனர். தப்பிச் சென்ற நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story