அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாபுஜி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க வலியுறுத்துவது, சம்பா சாகுபடி செய்து அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க கேட்டுக்கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story