குமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு ரூ. 10,000 அபராதம்

X

கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சேகரமாகும் குப்பைகளை மட்டும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தனித்தனியே பேருராட்சி வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் கோவிலின் பின்புறம் குவித்து வைத்திருந்தனர். இதனால் கோவில் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், சுற்றுலா பயணிகள் அவதி அடைவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்தது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது. எனவே உத்தரவுபடி குப்பைகளைப் பிரித்து பேரூராட்சி வாகனங்களில் ஒப்படைக்காமல் கோவில் பின்புறம் குவித்து வைத்ததற்காக திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து பேரூராட்சி நிர்வாகம் நேற்று நடவடிக்கை எடுத்தது. அபராத தொகையினை கடிதம் பெற்ற 24 மணி நேரத்துக்குள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் இருந்து வெளியேற்றப்படும் இளநீர் கூந்தல்கள், தென்னை மர இலைகள் போன்றவைகளை பேரூராட்சி வாகனத்தில் ஒப்படைக்காமல் கோவில் நிர்வாகம் நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Next Story