பாவுர்சத்திரத்தில் 10000 பேருக்கு நாளை காலையில் அன்னதானம்

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் பாவூர்சத்திரம் வென்னிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஏப்ரல் 14ம் தேதி நாளை திங்கள் கிழமை காலை 10.30 மணியளவில் சுவாமிக்கு அன்னாபிஷேகமும் 11.30 மணிக்கு அன்னதானம் நடைபெறும். இதில் கீழப்பாவூர் வட்டார அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், அரிசி வியாபாரிகள் சங்கம் தவிட்டு வியாபாரிகள் இணைந்து பத்தாயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் கீழப்பாவூர் பகுதியில் உள்ள அனைத்து பக்தர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

