நாமக்கல் அனுமன் ஜெயந்தி பெரு விழா : ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை தயாரிக்கும் சிறப்பு பூஜையுடன் பணி தொடங்கியது....
Namakkal King 24x7 |24 Dec 2024 3:15 PM GMT
அனுமன் ஜெயந்திக்காக 1,00,008 வடை தயாரிப்பதற்காக 2500 கிலோ உளுத்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, சீரகம் 35 கிலோ, 125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த பணியில் 40 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இவரை தரிசனம் செய்ய வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வழிப்பட்டு , ஆஞ்சநேயரின் அருள் பெற்று செல்கின்றனர்.ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.அந்த வகையில் இந்த ஆண்டும் வருகிற டிசம்பர்- 30 (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்படுகிறது.இந்த நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவிக்க 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையிலான 40 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்தடைந்தனர்.இவர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை தயாரித்து கொடுக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமன் ஜெயந்திக்காக 1,00,008 வடை தயாரிப்பதற்காக 2500 கிலோ உளுத்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, சீரகம் 35கிலோ, 125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. பொருட்களை சுத்தம் செய்து மாவரைத்து வடை செய்யும் பணி இரவு பகல் என 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெறும்,வடை தயாரிக்கும் பணி டிசம்பர் -24 செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி... 4 நாட்கள் நடைபெறும் என்றும் அதன்பின்னர் வடை மாலை கோர்க்கும் பணி நடைபெறும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று 1 லட்சத்து 8 வடை மாலையுடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அந்த வடை பிரசாதமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story