ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நன்செய்இடையாறு 10008 மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம்.

ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நன்செய்இடையாறு 10008 மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம்.
பரமத்தி வேலூர் அலுகே உள்ள நன்செய்இடையாறு மகா மாரியம்மன் கோயிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு 10008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பால்குட அபிஷேகம் மிக சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் பால்குட அபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடங்களில் பால் கொண்டுவந்து மாரியம்மனுக்கு ஊற்றி வணங்கி சென்றனர். இதில் அம்மனுக்கு 10 ஆயிரத்து 8 பால் குடங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
Next Story