ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு 1008 சங்க அபிஷேகம் பூஜை செய்து புதிய வெள்ளி கவசம் சாத்தப்பட்டது..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் தர்ம சம்பர்த்தினி கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காலபைரவருக்கு 1008 சங்க அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க, 1008 சங்க அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ காலபைரவருக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் 1008 சங்க அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு யாகங்கள் நடத்தி கால பைரவரை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் ஸ்ரீ காலபைரவருக்கு 11,000 வெள்ளி கிலோ கிராம் உபயம் செய்த வெள்ளிக் கவசத்தை காலபைரவருக்கு சாற்றி மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கோவிலை சுற்றி காலபைரவர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Next Story