ஸ்ரீ 1008 ஆதிநாதர் ஜினாலயத்தில் கோபுர கலச ஸ்தாபன விழா.

X
ஆரணி வட்டம் சதுபேரி பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ 1008 ஆதிநாதர் ஜினாலயத்தில் கோபுர கலச ஸ்தாபன திருவிழா நடைபெற்றது. முன்னதாக தர்ம சம்ரோக்க்ஷனம், வாஸ்து விதானம், நவகிரக ஹோமம், மூலகோபுரம்,கலச ஸ்தாபனை, ஞான கல்யாணம் மகாபிஷேகம், மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. கலச ஸ்தாபன விழாவில் திருமலை அரஹந்தகிரி ஜைன மடம் ஸ்வஸ்தி ஸ்ரீ தவள கீர்த்தி சுவாமிகள் மற்றும் மஹாசுவாமி லட்சுமி சேன பட்டாரக பட்டாச்சாரியார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை சிராவக சிராவகியர்கள் செய்திருந்தனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஜைனர்கள் கலந்துகொண்டனர்.
Next Story

