ஸ்ரீ சின்ன ராக்கம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்ற 1008 திரு விளக்கு பூஜை*

X
அருப்புக்கோட்டை அருகே அருள்மிகு ஸ்ரீ சின்ன ராக்கம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்ற 1008 திரு விளக்கு பூஜை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் இருந்து கொப்பு சித்தம்பட்டி செல்லும் வழியில் அருள்மிகு ஸ்ரீ சின்ன ராக்கம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அம்மன் நாக வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பல்வேறு வகையான பூஜைகள் ஹோமங்கள் வெகு விமர்சிசையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1008 திருவிளக்கு பூஜை சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் பக்தி மயத்துடன் கலந்து கொண்டு முறையான மந்திரங்கள் சொல்லி திருவிளக்கை அர்ச்சித்து செல்வமும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பெருக அருள்மிகு ஸ்ரீ சின்ன ராக்கம்மனை வழிபட்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் அம்மனின் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக நாக வடிவில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சின்ன ராக்கம்மணக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீப தூபம் காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

