அதங்கோடு மாயா கிருஷ்ணசுவாமி கோயில் 1008 திருவிளக்கு பூஜை

X
குமரி மாவட்டம் அதங்கோடு, ஆனந்தரகர் மாயா கிருஷ்ணசுவாமி கோயில் திருவிழா மார்ச் 6-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் மூன்றாம் திருவிழாவான நேற்று மாலை 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஆனந்த நகர் சமய வகுப்பு பொறுப்பாளர் ராஜேஸ்வரி மணிகண்டன் முன்னிலை வகித்தார். இந்திரா விஜயகுமார் திருவிளக்கு ஏற்றி வைத்தார். நெட்டாங்கோடு ஸ்ரீ சாரதாதேஸ்வரி ஆஸ்ரமம் யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகோஸ்வரி வித்யா புரி மாதாஜி உள்ளிட்டோர் 1008 திருவிளக்கு பூஜையினை நடத்தினர். இந்த 1008 திருவிளக்கு பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
Next Story

