அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை  இழை வளைகோல் பந்து மைதானத்துக்கு அடிக்கல்

அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை  இழை வளைகோல் பந்து மைதானத்துக்கு அடிக்கல்
X
அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை  இழை வளைகோல் பந்து மைதானத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அரியலூர், ஜூலை 14 - சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில், பங்கேற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து காணொலி வாயிலாக அரியலூர் விளையாட்டு அரங்கில், ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை வளைகோல் பந்து மைதானத்துக்கு அடிக்கல் நாட்டினார்.இதையடுத்து அரியலூர் விளையாட்டு அரங்கில், நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அங்கு கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தார்.முன்னதாக அவர், அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் 31 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கும்,  திருமானூர் ஒன்றியம் கீழக்கொளத்தூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 1 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார். மேலும் கீழக்கொளத்தூர்,மரகத் பூச்சோலையில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டாட்சியர் முத்துலட்சுமி, அரியலூர் நகராட்சி ஆணையர் (பொ) அசோக்குமார், நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், துணைத்தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story