சங்கரதாஸ் சுவாமிகள் 102வது நினைவு தினம் அனுஸ்டிப்பு
Komarapalayam King 24x7 |14 Nov 2024 12:21 PM GMT
குமாரபாளையத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் 102வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 102வது நினைவு தினம் தமிழ் அன்னை கலைக்குழுவினர் சார்பில் அனுஸ்டிக்கப்பட்டது. சதாசிவம் தலைமை வகித்தார். இவர் பேசியதாவது: தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க மரபிற்கேற்ப உரு பெற்றது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் நாடக உலகின் இமயமலை என்று வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. இவைகள் புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது. சங்கரதாசர் நூற்றாண்டு நிறைவையொட்டி, 1967-ஆம் ஆண்டில் சென்னையில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு மலர் ஒன்றை வெளியிட்டும் 1968-ஆம் ஆண்டில் மதுரை தமுக்கம் திடலின் வாயில் அவருக்குச் சிலை எழுப்பியும், இவரது மாணவரான தி. க. சண்முகம் சிறப்புச் சேர்த்தார். மேலும் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் என்னும் அமைப்பைத் தொடங்கி ஆண்டுதோறும் சங்கரதாசர் பிறந்தநாளை சண்முகம் கொண்டாடி வந்தார். மதுரை தமுக்கம் திடலில் உள்ள நாடக அரங்கிற்குத் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மதுரை ஒப்பனைக்காரத் தெருவில் இயங்கிவரும் நாடகக் கலைஞர்கள் சங்கத்திற்கும் சங்கரதாசரின் பெயர் இடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைக்கு தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைத் துறை எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Next Story