கலைஞர் மு. கருணாநிதி 102வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

கலைஞர் மு. கருணாநிதி 102வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
கலைஞர் மு. கருணாநிதி 102வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். கரூர் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ , சிவகாமசுந்தரி , கரூர் மாநகராட்சி மேயர் கவிதா , துணை மேயர் தாரணி சரவணன் , மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளைச் சார்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில்டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளைமுன்னிட்டு ஜூன் மூன்றாம் தேதி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து , மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் , உணவு வழங்குதல் , விளையாட்டு போட்டிகள் , இனிப்பு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானம் இயற்றப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி 4 ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் பகுதி, ஒன்றிய ,நகர ,பேரூர் கழகங்கள் சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி ,கரூர் , கிருஷ்ணராயபுரம் , குளித்தலை நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய முனைப்புடன் செயல்படவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story