கலைஞரின் 102வது பிறந்த நாள் மலர் தூவி மரியாதை

X
திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அண்ணா சிலையில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நன்றி என்ற கோஷங்களை எழுப்பியதோடு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் திமுகவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலையிலிருந்து சப் கலெக்டர் ஆபீஸ் ரோடு வழியாக ஊர்வலமாக வந்து திண்டுக்கல் கலைஞர் அரங்கிற்கு வந்தடைந்து கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கழக நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

