முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு
X
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திமுக தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அவர் பிறந்த இல்லத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமையில் நிர்வாகிகள், கருணாநிதியின் திருவுருவ சிலை க்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில், கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் வி.எஸ்.மாசேத்துங், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி.சங்கர், ஏஐடியுசி மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சிவதாஸ், சிபிஐ திருக்குவளை கிளை செயலாளர் கண்ணதாசன் மற்றும் மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story