தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் 102 -வது பிறந்த நாள் விழா

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் 102 -வது பிறந்த நாள் விழா
X
இந்தோனேசியாவை சேர்ந்த 50 ஆதரவற்ற சிறுவர்களுக்கு நலத்திட்ட உதவி
திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மறைந்த கருணாநிதியின் 102 -வது பிறந்த நாள் விழா, திமுக அயலக அணி சார்பில் இந்தோனேசியாவில் நடைப்பெற்றது. விழாவில், இந்தோனேசியாவை சேர்ந்த ஆதரவற்ற சிறுவர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில், கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக, கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. விழாவில். சிங்கப்பூர் அயலக அணி சார்பில் சந்திரசேகரன், செந்தில்குமார் மற்றும் இந்தோனேசியாவை சார்ந்த கலையரசன், முத்துசெல்வம், பாலமுருகன், பாண்டியன், டர்வீன், சிவசக்தி மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். இந்தோனேசியாவில், தமிழ் உணர்வோடு கலைஞரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய இந்தோனேசியா திமுக அயலக அணி அமைப்பாளரும். தொழிலதிபருமான ஆயக்காரன்புலம் வி.பி.திராவிடமணியை இந்தோனேசியா வாழ் தமிழர்கள் பாராட்டினர்.
Next Story