அம்பல் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102- வது பிறந்த நாள் விழா

அம்பல் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102- வது பிறந்த நாள் விழா
X
திமுக அரசின் 4-ம் ஆண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே அம்பல் ஊராட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 -வது பிறந்தநாள் விழா, திமுக அரசின் 4- ம் ஆண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு, திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ. செங்குட்டுவன் தலைமை வகித்தார். நாகை மாவட்ட செயலாளர் என்.கௌதமன் முன்னிலை வகித்தார், கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் பொறக்குடி ப.செல்வம், கழக இளம் பேச்சாளர் வியானி விஷ்வா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.என்.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜியாவுதீன், துணை அமைப்பாளர்கள் திருமலைவாசன், கலைவாணன், முருகானந்தம், மோகன், வீரசெல்வம் மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story