சேலத்தில் நேற்று அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் பதிவு

சேலத்தில் நேற்று அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் பதிவு
X
கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதி
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் பிப்ரவரி கடைசி வாரத்தில் தொடங்கி விடும். கடந்த ஆண்டு பெய்த மழையால் வெயிலின் தாக்கம் மார்ச் முதல் வாரத்தில் தான் தொடங்கியது. பின்னர் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் வறண்ட வானிலை காணப்படுகிறது. சேலத்தில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சாலையில் மக்கள் நடமாட்டம், வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வெயிலின் தாக்கத்தால் சேலம் சரகத்தில் மதிய நேரத்தில் பல சாலைகள் கானல்நீராக காட்சியளித்தது. சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 102 டிகிரி வெயில் பதிவானது அதன் பின்பு 98 முதல் 99.5 வெயில் அளவு பதிவானது. நேற்று முன்தினம் 101.12 வெயில் அடித்தது. நேற்று அது 103.3 டிகிரியாக அதிகரித்தது. இது நடப்பாண்டு கோடை துவங்கும் முன்பே பதிவான அதிகபட்ச வெயிலாகும்.
Next Story