விருத்தாசலத்தில் வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு கேட்டு பாமக தொடர் முழக்கப் போராட்டம்

X
உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் 1000 நாட்கள் ஆகியும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இட பங்கீடு வழங்காததை கண்டித்தும்சாதி வாரிய கணக்கெடுப்பு நடக்காத திமுக அரசை கண்டித்தும் கடலூர் மேற்கு மாவட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராசு, மாநில இளைஞர் சங்க செயலாளர் சுரேஷ், முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் திருஞானம், வழக்கறிஞர் என் ஆர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் .இதில் பாமக நிர்வாகிகள் ஆடியபாதம், கருணாநிதி, மாசு மணி, எம்.ஆர் மணிகண்டன், முருகன், மணிமாறன், மாவட்ட வன்னியர் சங்க ஒருங்கிணைப்பாளர் கே என் கே வெற்றிவேல், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர் வி பி ராஜ், ஜோதி, பிரபு, சத்தியா பானு மற்றும் ஒன்றிய, நகர, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

