கோவையில் 105-வது ஒயிலாட்ட அரங்கேற்ற விழா – எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடி மகிழ்வித்தார் !
கோவை நல்லூர்வயல் சின்மயா மகேஸ்வரர் ஆலய வளாகத்தில், சங்கமம் கலைக்குழுவின் 105-வது ஒயிலாட்ட அரங்கேற்ற விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை நடன கலைஞர்கள், கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் அன்புடன் வரவேற்றனர். விழாவைத் தொடங்கி வைத்த வேலுமணி, கலைஞர்களின் ஒயிலாட்ட அரங்கேற்றத்தை ரசித்து பாராட்டினார். மேலும், கலைஞர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடி, திரண்டு இருந்த பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பொருளாளர் N.S.கருப்புசாமி, தொண்டாமுத்தூர் விவசாய அணி செயலாளர் நாச்சிமுத்து, கூட்டுறவு வங்கி தலைவர் N.C.சுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர் D.C.பிரதீப், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் K.V.செல்லமுத்து, விவசாய பிரிவு தலைவர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சங்கமம் கலைக்குழுவின் ஆசிரியர்கள், கழக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story




