கரூர் மாவட்டத்தில் 106.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 106.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 106.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. வடகிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற்று அழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து தற்போது இது சக்தி என்ற பெயருடன் புயலாக மாறி வந்துள்ளது.இது தீவிர புயலாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்ததோடு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை கரூர் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்துள்ளது இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூரில் 1.80 மில்லி மீட்டரும் மாவட்டத்தில் அதிகபட்சமாக குளித்தலையில் 30 மில்லி மீட்டரும் தோகை மலையில் 13.60 மில்லி மீட்டர் கிருஷ்ணராயபுரத்தில்10.50 மில்லி மீட்டர் மாயனூரில் 6 மில்லி மீட்டர் பஞ்ச பட்டியில் 21 மில்லி மீட்டர் கடவூரில் 12மில்லி மீட்டர் பாலவிடுதியில் 6 மில்லி மீட்டர் மைலம்பட்டியில் 6 மில்லி மீட்டர் என மொத்தம் 106.90 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 8.91மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story