அல்லியாளமங்கலம் நடுநிலைப் பள்ளியில் 107 ஆம் ஆண்டு விழா.

X

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போளூர் அடுத்த அல்லியாளமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 107 ஆம் ஆண்டு ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அல்லியாளமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 107 ஆம் ஆண்டு ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர்கள் வேலு மற்றும் மன்னார்சாமி ஆகியோர் தலைமையிலும், வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கலாசி, ஆசிரியர் பயிற்றுனர் திரிபுரசுந்தரி முன்னிலையிலும் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் மரிய ஜேம்ஸ் பீட்டர் வரவேற்புரை நிகழ்த்தினார், தலைமை ஆசிரியர் அனிதா ஆண்டறிக்கையை வாசித்தார், மேலும் நிகழ்ச்சியை பட்டதாரி ஆசிரியர் லலிதாலட்சுமி தொகுத்து வழங்கினார், கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை ஆசிரியர் ஜெயா மேற்கொண்டார். ஆண்டு விழாவில் மாணவர்களின் பேச்சுப்போட்டி, நடன போட்டி, தனி நடிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தற்காலிக இடைநிலை ஆசிரியர் சத்யா, பட்டதாரி ஆசிரியர் தீபா, சுஜிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story