வேலை வாங்கி தருவதாக ரூ.10,70,000 மோசடி

X

நத்தம் இளைஞரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10,70,000 மோசடி போலியான நியமன உத்தரவு கொடுத்த வாலிபர் கைது
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை சேர்ந்த செந்தில்குமார் இவர் பட்டதாரி ஆவார். இவரிடம் சதீஷ்குமார் என்பவர் அறிமுகமாகி தனக்கு தமிழக நீர்வளத்துறையில் பல அதிகாரிகளை தெரியும் திருச்சி நீர்வளத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வங்கி கணக்கு மூலம் ரூ.10,70,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு போலியான அரசு நியமன உத்தரவை செந்தில்குமார் கொடுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செந்தில்குமார் இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களிடம் புகார் அளித்ததன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு DSP.குமரேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சென்னையில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story