சேலம் பத்மவாணி மகளிர் கல்லூரியில்1,076 மாணவிகளுக்கு பட்டங்கள்

சேலம் பத்மவாணி மகளிர் கல்லூரியில்1,076 மாணவிகளுக்கு பட்டங்கள்
X
பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் வழங்கினார்
சேலம் கருப்பூர் அடுத்த கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.சத்தியமூர்த்தி, செயலாளர் துரைசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ஹரி கிருஷ்ணராஜ் வரவேற்றார். பத்மவாணி கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்துக்குமார், கே.எஸ். கல்வியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கலந்து கொண்டு 1,076 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பின்னர். பெரியார் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிகளுக்கு ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் தொகைக்கான காசோலையை மாணவிகளுக்கு அவர் வழங்கினார். கல்லூரி இயக்குனர் இசைவாணி சத்தியமூர்த்தி, கலந்துகொண்டு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். துணை முதல்வர் பழனியம்மாள், மாணவிகள், பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் உமா நன்றி கூறினார். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் மணிவண்ணன், கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்து உரையாடினார்.
Next Story