ஆத்தூர் : 108 திருவிளக்கு பூஜை
Attur King 24x7 |22 July 2024 11:41 AM GMT
ஆத்தூர் அருகே கல்லாந்த்தம் கிராமத்தில் உலக நம்மைக்காக அண்ணாமலையார் திருக்கோவிலில் 108 விளக்கு பூஜை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் பால்குடம் எடுத்தல் திருவிளக்கு பூஜை முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது . பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கவேண்டி, மாங்கல்ய பூஜை செய்து மஞ்சள், குங்குமம்,பூ ,, தேங்காய் பழம் தாலிக் கயிறு ஜாக்கெட் துணி உள்ளிட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்தனர்,பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது . இதில் கல்லாநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையாரை தரிசித்தனர்.
Next Story