தலைமை தபால் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தலைமை தபால் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
தலைமை தபால் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் சங்க மாவட்ட தலைவர் வரதராஜூ தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், அரசு உதவி மருத்துவர் பணி தொழிலாளர் சங்க மதுரை மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி, நர்சிங் யூனிட் மாநில துணைத்தலைவி ரேவதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை வலியுறுத்தி, கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 3 வருடமாக சம்பளம் உயர்த்த வில்லை அதனை உயர்த்தி கொடுக்க வேண்டும். 12 மணி நேர வேலையை மாற்றி 8 மணி நேர வேலையாக குறைக்க வேண்டும். நர்சிங் தொழிலாளர்களுக்கு இரண்டு வருடமாக வழங்காத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். வார விடுமுறை வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூபாய் 12000 வழங்க வேண்டும். அரசு ஆயுஸ் தொழிலாளர்களுக்கு 15 வருடமாக சம்பளம் உயர்த்தி வழங்கவில்லை. எனவே ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். எல்பிஜி சிலிண்டர் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். 12000 போனஸ் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story