சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை பெருங்குளம் ஆதீனம் சிவப்பிரகாச தேசிய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், கடையம் பைரவ சாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர் நிகழ்ச்சிக்கு ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் கார்த்திகேயன், குமரிக்கோட்ட தலைவர் ராஜாஜி, தென்காசி மாவட்ட பொது செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க தென்காசி மாவட்ட தலைவர் சிவ பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். 108 திருவிளக்கு பூஜையை முன்னிட்டு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், அமைப்பாளர் லட்சுமண பெருமாள், செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

