லட்சுமி நரசிம்மா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, 108 பால்குட ஊா்வலம்

X
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சூரக்குட்டை கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மதுராந்தகம் தா்மராஜா் கோயிலில் இருந்து லட்சுமி நரசிம்மா் உற்சவா் சிலை அலங்கரிக்கப்பட்டு, 108 பெண்கள் பால்குடம் ஏந்தி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்தனா்.பின்னா், அவா்கள் கோயில் வளாகத்தில் உள்ள அனுமன் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனா். கோயில் பீடாதிபதி வேணுதாச சுவாமிகள் தலைமை வகித்து, ஆஞ்சனேயருக்கு மகா தீபாராதனை செய்தாா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். மாலை 6 மணிக்கு வெண்ணை காப்பு சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்மா் சுவாமி கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Next Story

