ஆகாய கன்னியம்மனுக்கு 108 பால்குட திருவிழா

ஆகாய கன்னியம்மனுக்கு 108 பால்குட திருவிழா
சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் அமைந்துள்ள ஆகாய கன்னியம்மனுக்கு, ஐந்தாம் ஆண்டு பால்குட திருவிழா
சின்ன காஞ்சிபுரம் திரவுபதியம்மன் கோவில் தெரு, வேகவதி நதி ரோடு, சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் அமைந்துள்ள ஆகாய கன்னியம்மனுக்கு, ஐந்தாம் ஆண்டு பால்குட திருவிழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, திருக்கச்சியம்பதி விநாயகர் கோவிலில் இருந்து, 108 பால்குட ஊர்வலம் துவங்கியது. இதில், பம்பை, உடுக்கை, மற்றும் இன்னிசை வாத்தியங்கள் இசைக்க, பால்குடம் ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை படவேட்டம்மன், ஆகாய கன்னியம்மன் கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story