பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்.

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்.
X
நாமக்கல் பரமத்திவேலூர் மகாமாரியம்மன் ஆலயத்தில் மார்கழி வெள்ளியை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பரமத்தி வேலூர், ஜன. 3: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் மார்கழிமாத வெள்ளிகிழமையை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ செல்வ விநாயகர் சன்னதி முன் 108 வலம்புரி சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை துவங்கி பூர்ணாகதி நிறைவு பெற்ற பின் மூலவர் மகா மாரியம்மனுக்கு பலவகையான வாசனை திரவியம் 108 வலம்புரி சங்கு கலச தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுபல்வேறு மலர்களால் அர்ச்சனை செய்த பின் கோபுர தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளாமானவர்கள் மகா மாரியம்மன் வணங்கி சென்றனர் வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிக சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story